ADDED : ஜூன் 05, 2026 10:40 PM

லார்ட்ஸ்: இங்கிலாந்து பவுலர்கள் அசத்த, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 113 ரன் மட்டும் எடுத்தது.
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 140 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 61/6 ரன் எடுத்திருந்தது. பிலிப்ஸ் (31), ஸ்மித் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜோஷ் டங் 'சுழலில்' பிலிப்ஸ் (34), நாதன் ஸ்மித் (15) சிக்கினர். வில் ஓ'ரூர்க் (1), மாட் ஹென்றி (0) ஏமாற்றினர். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 113 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஜேமிசன் (38) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ராபின்சன் 5, டங் 3, அட்கின்சன் 2 விக்கெட் சாய்த்தனர்.
எமிலியோ அரைசதம்: பின், 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் (33), எமிலியோ ஜோடி துவக்கம் தந்தது. ஜேக்கப் பெத்தேல் (14) நிலைக்கவில்லை. எமிலியோ (57) அரைசதம் கடந்தார். ஹாரி புரூக் 'டக்-அவுட்' ஆனார். ஜோ ரூட் (8), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (0) சோபிக்கவில்லை.
ஜேமி ஸ்மித் (39), ராபின்சன் (29) ஓரளவு கைகொடுத்தனர். நாதன் ஸ்மித் பந்தில் ஜோஷ் டங் (5) அவுட்டானார். இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 226 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. நியூசிலாந்து சார்பில் நாதன் ஸ்மித் 6 விக்கெட் கைப்பற்றினார்.
பின், 254 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் டாம் லதாம் (0) ஏமாற்றினார். நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டுக்கு 4 ரன் எடுத்து, 250 ரன் பின்தங்கி இருந்தது. வில்லியம்சன் (3) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் அட்கின்சன் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
