/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
படிக்கல் 150 ரன் விளாசல் * லக்னோ டெஸ்ட் 'டிரா'
/
படிக்கல் 150 ரன் விளாசல் * லக்னோ டெஸ்ட் 'டிரா'
ADDED : செப் 19, 2025 11:13 PM

லக்னோ: இந்திய 'ஏ', ஆஸ்திரேலிய 'ஏ' அணிகள் மோதிய லக்னோ டெஸ்ட் 'டிரா' ஆனது. தேவ்தத் படிக்கல் சதம் அடித்து உதவினார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய 'ஏ' அணி, அதிகாரப்பூர்வமற்ற இரண்டு டெஸ்ட் (தலா நான்கு நாள்) போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி லக்னோவில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய 'ஏ' அணி 532/6 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. மூன்றாவது நாள் முடிவில் இந்திய 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 403/4 ரன் குவித்து, 129 ரன் பின்தங்கி இருந்தது. படிக்கல் (86), துருவ் ஜுரல் (113) அவுட்டாகாமல் இருந்தனர்.
நேற்று நான்காவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தேவ்தத் படிக்கல் சதம் கடந்தார். 5வது விக்கெட்டுக்கு 228 ரன் சேர்த்த நிலையில், துருவ் ஜுரல் (140) அவுட்டானார். தனுஷ் 16 ரன் எடுத்தார். தேவ்தத் படிக்கல் 150 ரன் எடுத்து வெளியேறினார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 531/7 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. ஹர்ஷ் துபே (16), பிரசித் கிருஷ்ணா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
மழை காரணமாக போட்டி தடை பட்டது. மீண்டும் ஆட்டம் துவங்கியதும், இரண்டாவது இன்னிங்சை துவக்கியது ஆஸ்திரேலிய 'ஏ' அணி. 16 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 56 ரன் எடுத்த போது, போட்டி 'டிரா' ஆனது. கான்ஸ்டாஸ் (27), கேம்ப்பெல் (24) அவுட்டாகாமல் இருந்தனர்.