/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மத்திய மண்டலம் ரன் குவிப்பு: துலீப் டிராபி பைனலில்
/
மத்திய மண்டலம் ரன் குவிப்பு: துலீப் டிராபி பைனலில்
மத்திய மண்டலம் ரன் குவிப்பு: துலீப் டிராபி பைனலில்
மத்திய மண்டலம் ரன் குவிப்பு: துலீப் டிராபி பைனலில்
ADDED : செப் 12, 2025 11:06 PM

பெங்களூரு: துலீப் டிராபி பைனலில் மத்திய மண்டல அணி கேப்டன் ரஜத் படிதர், யாஷ் ரத்தோட் சதம் விளாசினர்.
பெங்களூருவில் நடக்கும் துலீப் டிராபி கிரிக்கெட் பைனலில் தெற்கு, மத்திய மண்டல அணிகள் விளையாடுகின்றன. தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 149 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் மத்திய மண்டல அணி 50/0 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் டேனிஷ் மாலேவார் (53) அரைசதம் கடந்தார். அக்சய் வாட்கர் (22) நிலைக்கவில்லை. சுபம் சர்மா (6) ஏமாற்றினார். பின் இணைந்த கேப்டன் ரஜத் படிதர், யாஷ் ரத்தோட் ஜோடி கைகொடுத்தது. இருவரும் சதம் கடந்தனர். நான்காவது விக்கெட்டுக்கு 167 ரன் சேர்த்த போது ரஜத் படிதர் (101) அவுட்டானார்.
ஆட்டநேர முடிவில் மத்திய மண்டல அணி முதல் இன்னிங்சில் 384/5 ரன் எடுத்து, 235 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ரத்தோட் (137), சரண்ஷ் ஜெயின் (47) அவுட்டாகாமல் இருந்தனர். தெற்கு மண்டலம் சார்பில் குர்ஜப்னீத் சிங் 3 விக்கெட் கைப்பற்றினார்.