sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

டேபிள் டென்னிஸ்: சத்யன் ஏமாற்றம்

/

டேபிள் டென்னிஸ்: சத்யன் ஏமாற்றம்

டேபிள் டென்னிஸ்: சத்யன் ஏமாற்றம்

டேபிள் டென்னிஸ்: சத்யன் ஏமாற்றம்


ADDED : செப் 15, 2025 10:43 PM

Google News

ADDED : செப் 15, 2025 10:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்தான்புல்: துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் உலக டேபிள் டென்னிஸ் சார்பில் 'பீடர்' தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இத்தொடரின் 'நம்பர்-3' வீரர் இந்தியாவின் சத்யன், 15வது அந்தஸ்து பெற்ற ரஷ்யாவின் விளாடிமிரை எதிர்கொண்டார். முதல் செட்டை சத்யன் 9-11 என இழந்தார். அடுத்த செட்டிலும் 8-11 என ஏமாற்றினார். அடுத்து நடந்த மூன்றாவது செட்டை 9-11 என நழுவவிட்டார். முடிவில் சத்யன் 0-3 (9-11, 8-11, 9-11) என நேர் செட்டில் தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பெற்றார்.

மணிகா தோல்வி

பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் மணிகா பத்ரா, 10ம் நிலை வீராங்கனை, துருக்கியின் சிபெல் அல்டின்கயாவை எதிர்கொண்டார். முதல் செட்டை 6-11 என இழந்த மணிகா, அடுத்த செட்டை 12-10 என வென்றார். பின் ஏமாற்றிய இவர், 3, 4வது செட்டுகளை 7-11, 13-11 என கோட்டை விட்டார்.

முடிவில் மணிகா 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

கலப்பு இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் ஆகாஷ் பால், பொய்மன்தீ ஜோடி 0-3 என (12-14, 8-11, 4-11) தென் கொரியாவின் கோயகா, ஒகானோ ஜோடியிடம் வீழ்ந்தது.






      Dinamalar
      Follow us