/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
லக்சயா இரண்டாவது இடம் * ஹாங்காங் பாட்மின்டனில்...
/
லக்சயா இரண்டாவது இடம் * ஹாங்காங் பாட்மின்டனில்...
ADDED : செப் 14, 2025 10:56 PM

ஹாங்காங்: ஹாங்காங் ஓபன் பாட்மின்டனில் இந்தியாவின் லக்சயா சென், இரண்டாவது இடம் பெற்றார்.
ஹாங்காங்கில் சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் லக்சயா சென், ('நம்பர்-20'), உலகத் தரவரிசையில் 'நம்பர்-4' ஆக உள்ள, சீனாவின் ஷி பெங் லியை எதிர் கொண்டார். முதல் செட்டில் ஒரு கட்டத்தில் 10-10 என சமநிலையில் இருந்த லக்சயா, முடிவில் 15-21 என செட்டை இழந்தார்.
இரண்டாவது செட்டிலும் துவக்கத்தில் இருந்து பின்தங்கிய லக்சயா, 12-21 என நழுவவிட்டார். முடிவில் லக்சயா 15-21, 12-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பிடித்தார்.
இரட்டையரில் ஏமாற்றம்
ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சீனாவின் வெய் கெங் லியாங், சங் வாங் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை இந்திய ஜோடி 19-21 என கைப்பற்றியது. அடுத்த செட்டை 14-21 என நழுவவிட்டது. மூன்றாவது, கடைசி செட்டிலும் இந்திய ஜோடி 17-21 என ஏமாற்றியது.
முடிவில் இந்திய ஜோடி 21-19, 14-21, 17-21 என்ற செட் கணக்கில் போராடி தோற்க, இரண்டாவது இடம் பெற்றது.