/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாஸ்பேட்டையில் நவராத்திரி கொலு 5ம் தேதி வரை பார்வைக்கு அனுமதி
/
லாஸ்பேட்டையில் நவராத்திரி கொலு 5ம் தேதி வரை பார்வைக்கு அனுமதி
லாஸ்பேட்டையில் நவராத்திரி கொலு 5ம் தேதி வரை பார்வைக்கு அனுமதி
லாஸ்பேட்டையில் நவராத்திரி கொலு 5ம் தேதி வரை பார்வைக்கு அனுமதி
ADDED : செப் 30, 2025 08:45 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டையில், அமைத்துள்ள நவராத்திரி கொலு அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
லாஸ்பேட்டை மகாவீர் நகர் 4 -வது குறுக்கு தெரு எம்.எஸ்.வி., அப்பார்மெண்ட்டில் 4-வது மாடியில் வசிப்பவர் சுமதி,68; இவர், நவராத்திரியையொட்டி, ஆகம விதிப்படி 9 படிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் கொண்டு கொலு அமைத்துள்ளார்.
கிருஷ்ணர் பிறப்பு, விளையாட்டு, லீலைகள், கிராம சூழல், வயல் வெளி, மலைகள், காட்டு விலங்குகள்,18 சித்தர்கள், சப்த ரிஷிகள், ஆழ்வார்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. நேற்று மாலை நடந்த பூஜையில் பங்கேற்ற கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., மனைவி பிரியதர்ஷினி, நேர்த்தியாக கொலு அமைத்திருந்த சுமதியை பாராட்டி பரிசு வழங்கினர்.
இதுகுறித்து சுமதி கூறுகையில், ஆதிபராசக்தியின் அருளால் மும்மூர்த்திகள் தொடங்கி ஈ, எறும்பு உள்ளிட்ட சகலமும் படைக்கப்பட்டு படி நிலைகளாக வைத்து காக்கப்படுகிறது என்பதை நினைவுறுத்தவே நவராத்திரி நாளில் வீடுகளில் கொலு வைக்கப்படுகிறது. சூத்தரதாரி அம்பாள். நாமெல்லாம் பொம்மைகள் என்பதே கொலுவின் அடிப்படை தத்துவம் என்றார்.
மேலும், தனது வீட்டில் வைத்துள்ள கொலுவை, வரும் 5ம் தேதிவரை தினசரி இரவு 7:௦௦ மணி முதல் 10:௦௦ மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என்றார்.