/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னர், முதல்வருக்கு நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை
/
கவர்னர், முதல்வருக்கு நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : செப் 30, 2025 08:46 AM
புதுச்சேரி,: போலீசாருக்கு இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென நேரு எம்.எல்.ஏ., கவர்னர் மற்றும் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
காவல் துறையில் பணிபுரியும் போலீசார் பலவிதமான பணி சுமைகளுக்கிடையே தங்களது பணியினை செய்து வருகின்றனர். கூடுதல் பணிசுமையுடன் பணிபுரியும் போலீசாரின் நியாயமான பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
நாளை (1ம் தேதி) காவல்துறையின் உதயநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், காவலர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தை செயல்படுத்த வேண்டும். போலீசாருக்கு அரசு இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இரவு பணி படி தொகை வழங்க வேண்டும்.
ரிசர்வ் பட்டாலியன் பிரிவினர் சம்பள முரண்பாட்டை களைய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.