/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நலத்திட்ட உதவிகள் சபாநாயகர் வழங்கல்
/
நலத்திட்ட உதவிகள் சபாநாயகர் வழங்கல்
ADDED : செப் 20, 2025 07:26 AM
அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியில் அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் முதல்வரின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் பெண் குழந்தைக்கு 50 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி வங்கியில் செலுத்தும் திட்டத்தின் மூலம், 75 பெண் குழந்தைகளுக்கு, 37.50 லட்சம் ரூபாய் செலுத்தியதற்கான ஆணையை சபாநாயகர் செல்வம் பயனாளிகளிடம் வழங்கினார்.
இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் உள்ளவர்களுக்கு, தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம், 8 நபர்களுக்கு, 4.80 லட்சம் ரூபாய் செலுத்தியதற்கான ஆணை வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் தொடர் நோய் சிகிச்சை திட்டத்தின் கீழ், 3 நபர்களுக்கு தலா 18 ஆயிரம் வீதம் 54 ஆயிரம் ரூபாய், என மொத்தம் 42.84 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இணை இயக்குனர் ஜெயப்பிரியா, மாவட்ட தலைவர் சுகுமார் கிருஷ்ணமூர்த்தி, தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், பொதுக்குழு உறுப்பினர் சக்திபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.