/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச மருத்துவ முகாம்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச மருத்துவ முகாம்
ADDED : செப் 20, 2025 07:17 AM
அரியாங்குப்பம் : சுகாதாரத்துறை சார்பில், முருங்கப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.
சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஷமீமுநிஷா முகாமை துவங்கி வைத்தார். டாக்டர் ரகுநாதன் முன்னிலை வகித்தார்.
தனியார் மருத்துவ கல்லுாரி, மாணவர்கள், தன்னார்வு அமைப்பை சேர்ந்தர்கள் பங்கேற்றனர்.
நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், காச நோய், போன்ற நோய்களுக்கு பரிசோதனை செய்து, மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.
பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. முகமில், 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று, பயனடைந்தனர். ஏற்பாடுகளை, முருங்கப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் டாக்டர்கள் மேனகா, சரண்குமார் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.