ADDED : மே 29, 2026 05:39 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: பொதுஇடத்தில் ஆபா ச மாக பேசிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். செல்லஞ்சேரி பகுதியைச் சேர்ந்த மதன்குமார், 27, என்பவர், மது போதையில், மங்கலம் - ஏம்பலம் சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொது மக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டி ருந்தார்.
அங்கு ரோந்து பணி யில் இருந்த போலீசார் அந்த வாலிபர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
இதேபோல் மடுகரையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசிய அலெக்சான்டர், 36, திருபுவனையில் ஆபாசமாக பேசிய வளவனுார் மணிபிரபு, 42, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
