ADDED : மே 29, 2026 05:38 AM

பாகூர்: பாகூர் தொகுதியில் மின்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய புதிய பணிகள் குறித்து, மின் துறை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மின்துறை செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில், பாகூர் பகுதி தொடர்ந்து மின்தடை இல்லாத பகுதியாக நீடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு திட்டப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என, வலியுறுத்தினார்.
மேலும், புதிய குடியிருப்பு பகுதிகளுக்கு தேவையான மின் மாற்றி கள் அமைத்தல், புதிய நகர்களில் தெருமின் விளக்குகள் அமைத்தல், உயர் மின்னழுத்த பாதைகளில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக கண்டறியக் கூடிய வகையில் மின் பாதைகளை மாற்றி அமைக்கும் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் செந்தில்குமார் எம்.எல்.ஏ., கேட்டுக் கொண்டார்.
