/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நலத்திட்ட பணிகளை பட்டியலிட்டு காங்., வைத்தியநாதன் ஓட்டு வேட்டை
/
நலத்திட்ட பணிகளை பட்டியலிட்டு காங்., வைத்தியநாதன் ஓட்டு வேட்டை
நலத்திட்ட பணிகளை பட்டியலிட்டு காங்., வைத்தியநாதன் ஓட்டு வேட்டை
நலத்திட்ட பணிகளை பட்டியலிட்டு காங்., வைத்தியநாதன் ஓட்டு வேட்டை
ADDED : மார் 31, 2026 11:05 PM

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் காங்., வேட்பாளர் வைத்தியநாதன் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் வைத்தியநாதன் தொகுதி முழுதும் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரம் கொடுத்து கை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்து வருகிறார்.
நேற்று, சாந்தி நகர், மூகாம்பிகை நகர், கிருஷ்ணா வீதி, வெங்கடேஸ்வரா வீதி, இளங்கோவடிகள் வீதி, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை வீதி, வ.உ.சி. வீதி, கட்டபொம்மன் வீதி, திரு.வி.க., வீதி, அக்பர் வீதி, புது தெரு, சித்தார்த் வீதி, சேரன் வீதி, சோழன் வீதி, சிவாஜி வீதி, காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் துண்டு பிரசுரம் கொடுத்தும், தொகுதியில் தான் செய்த நலத்திட்ட பணிகளை எடுத்துக்கூறி ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'தொகுதியில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்த பணிக்கு எனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என, கேட்டார். தொகுதி மக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஓட்டு சேகரிப்பில் காங்., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.