UPDATED : ஜூன் 10, 2026 07:43 PM
ADDED : ஜூன் 10, 2026 07:41 PM
நெட்டப்பாக்கம்: ஏரிப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் கிராமத்தில் உள்ள பூரணி பொற்கலை உடனுறை செங்குளத்து அய்யனார், திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, கடந்த 4ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி, தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடந்து வருகிறது.
நேற்று காலை 9:00 மணிக்கு அர்ஜூனன் - திரவுபதி திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. முன்னதாக ஜூன் 9 மாலை மாற்றுதல் சீர்தட்டு வரிசை கொண்டு வருதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஜூன் 12 மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி ரமேஷ் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.
