ADDED : ஜூன் 10, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
லாஸ்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, லாஸ்பேட்டை, இடையன்சாவடி ரோட்டில் கத்தியுடன் ஒரு வாலிபர் பொதுமக்களை மிரட்டி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்றபோது, அவர் தப்பிக்க முயன்றார். அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில், லாஸ்பேட்டை, சாமிப்பிள்ளை தோட்டத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் தமிழ்மணி, 24, என்பது தெரியவந்தது.
அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
