ADDED : ஜூன் 21, 2026 11:51 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: சொக்கம்பட்டு ஜெயமங்கள துர்காம்பிகை கோவிலில் ராகு கால சிறப்பு பூஜை நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த சொக்கம்பட்டு – கரியமாணிக்கம் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற ஜெயமங்கள துர்காம்பிகை கோவில் உள்ளது. இக்கோவிலில் ராகு கால பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 9:00 மணிக்கு பால், இளநீர், தேன் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது.
மாலை 4:00 மணிக்கு ராகுகால பூஜை நடந்தது. தொடர்ந்து பொது மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கரியமாணிக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
