தனியார் மருத்துவமனை ஊழியர் துாக்குப் போட்டு தற்கொலை
தனியார் மருத்துவமனை ஊழியர் துாக்குப் போட்டு தற்கொலை
ADDED : ஜூன் 21, 2026 11:51 PM
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, சவுக்குபேட் வீதியை சேர்ந்தவர் அமலநாதன், 34; கனகசெட்டிக்குளம், தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவருக்கு, பவுலினா மேரி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக வேலையில் ஏற்பட்ட பணிசுமை காரணமாக அமலநாதன், மன உளைச்சலில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியரின் உறவினர் இறந்ததால், ஊழியர்கள் அனைவரும் மதியத்துடன் வீட்டிற்கு சென்றனர்.
வீட்டிற்கு வந்த அமலநாதன், தனது வீட்டின் இரண்டாம் தளத்தில் உள்ள அறையில் துாக்குப்போட்டுக் கொண்டார். இதைகண்ட அவரது மனைவி, உறவினர்கள் உதவியுடன் அமலநாதனை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, டாக்டர் பரிசோதித்து அமலநாதன் இறந்தை உறுதி செய்தார். புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
