UPDATED : ஜூன் 15, 2026 09:28 PM
ADDED : ஜூன் 15, 2026 09:21 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பாண்டிச்சேரி மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
வெங்கட்டா நகரில் நடந்த கூட்டத்திற்கு பொருளாளர் ராமலிங்கம் ஆண்டு, வரவு செலவு கணக்கு பற்றி ஆண்டறிக்கை வாசித்தார். துணை தலைவர் நளினி சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி ரமேஷ் மூத்த குடிமக்கள் எதிர் கொள்ளும் பல்வேறு சட்ட சிக்கல்களை எவ்வாறு எதிர் கொள்வது பற்றி பேசினார்.
உலக முதியோர் தினத்தையொட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மூத்த குடிமக்கள், சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்க தலைவர் வேணுகோபால் செய்திருந்தார்.
