தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் கார் திருட்டு: சேலம் ஆசாமி சிக்கினார்

புதுச்சேரியில் கார் திருட்டு: சேலம் ஆசாமி சிக்கினார்

புதுச்சேரியில் கார் திருட்டு: சேலம் ஆசாமி சிக்கினார்


UPDATED : மே 12, 2026 06:48 PM

ADDED : மே 12, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 12, 2026 06:48 PM ADDED : மே 12, 2026 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் கார் திருடிய சேலம் ஆசாமியை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், புதுப்பாளையம், பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ஹேம்குமார், 22; டிரைவர். இவர், கடந்த 11ம் தேதி காலை தனது நண்பர்களான ஆர்.பிரவீன், மாதவன், வி.பிரவீன், ஸ்ரீநாத் ஆகியோருடன் சுசூகி எர்டிகா காரில் (டிஎன்05- ஏடி5904) புதுச்சேரி வந்தார்.

பின், ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் அறை எடுத்து தங்கிய அவர்கள் வெளியே செல்லாமல் அறையில் படுத்து துாங்கினர். ஹேம்குமார் எழுந்து நள்ளிரவு 1:00 மணியளவில் எழுந்து பார்த்தபோது, அறையில் இருந்த அவர்களது 5 மொபைல் போன் மற்றும் கார் சாவி மாயமாகி இருந்தது.

இதையடுத்து, கெஸ்ட் ஹவுஸ் அறையில் இருந்து கீழே வந்து பார்த்தபோது, காரையும் காணவில்லை. இதுகுறித்து ஹேம்குமார் அளித்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர்.

அதில், அங்குள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை பார்வையிட்டு, கார் உள்ள இடத்தின் லொக்கேஷனை ஆய்வு செய்தபோது, திருடப்பட்ட கார் உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று காலை 11:00 மணிக்கு அங்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர், சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் காரை கண்டுபிடித்து, திருடி சென்றவரை பிடித்து, புதுச்சேரி அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில், காரை திருடி சென்றது சேலம், நெத்திமேடு, காந்தி நகரைச் சேர்ந்த பழனிசாமி மகன் சூர்யா, 27; என்பதும், ஆக்டிங் டிரைவரான இவர், புதுச்சேரிக்கு வந்து, ேஹம்குமார் தங்கியிருந்த அறைக்கு பக்கத்து அறையில் தங்கிருந்துள்ளார். ேஹம்குமார் உள்ளிட்ட அனைவரும் மது அருந்திவிட்டு, அறைக்கதவை திறந்து வைத்து, துாங்கியுள்ளனர். அப்போது உள்ளே சென்ற சூர்யா மொபைல் போன்கள் மற்றும் கார் சாவியை எடுத்துக் கொண்டு, காரை திருடி சென்றது தெரியவந்தது.

சூர்யாவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பிலான சுசூகி எர்டிகா கார் மற்றும் 5 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். சூர்யாவை புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். 24 மணி நேரத்திற்குள் காரை மீட்ட போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us