முதல்வர் ஆக்கப்பூர்வமாக பேச வேண்டும்: பிரேமலதா வலியுறுத்தல்
முதல்வர் ஆக்கப்பூர்வமாக பேச வேண்டும்: பிரேமலதா வலியுறுத்தல்
UPDATED : ஜூன் 04, 2026 08:14 PM
ADDED : ஜூன் 04, 2026 08:11 PM
விருத்தாசலம்: தேர்தல் நேர பிரசாரத்தில் பேசுவது போல் இல்லாமல், மக்கள் நலனுக்காக ஆக்கப்பூர்வமாக முதல்வர் பேச வேண்டும் என பிரேமலதா எம்.எல்.ஏ., கூறினார்.
விருத்தாசலம் எம்.எல்.ஏ., அலுவலகத்தை பிரமேலதா எம்.எல்.ஏ., நேற்று திறந்து வைத்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தேர்தலின்போது, தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன். விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என முதல்வரை சந்திந்து கோரிக்கை மனு வழங்குவேன். 15 நாட்களுக்கு ஒருமுறை தொகுதிக்கு வந்து, 3, 4 நாட்கள் தங்கி மக்கள் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுப்பேன். எம்.எல்.ஏ., அலுவலகம் தினசரி திறந்திருக்கும்.
பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுவை அளிக்கலாம். வாக்குறுதியை உண்மையாக நிறைவேற்ற முடியும் என்றால் தான் தேர்தல் வாக்குறுதிகளை தர வேண்டும்.
டாஸ்மாக் கடைகளை மூடுவதை அரசு கண்துடைப்பாக நடத்தியுள்ளது. தேர்தல் நேர பிரசாரத்தில் பேசுவதுபோல் இல்லாமல், மக்கள் நலனுக்காக ஆக்கப்பூர்வமாக முதல்வர் பேச வேண்டும்.
எந்த கூட்டணி கட்சியில் நின்று வெற்றி பெற்றோமோ அந்த கட்சியுடன்தான் நாங்கள் கூட்டணி தர்மத்தோடு இருக்கிறோம். அதில்தான் தொடர்வோம்.
இவ்வாறு பேசினார்.
