சர்வீஸ், சார்ஜ் ஸ்டேஷன் அமைக்க கோரி எலக்ட்ரிக் ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை
சர்வீஸ், சார்ஜ் ஸ்டேஷன் அமைக்க கோரி எலக்ட்ரிக் ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை
ADDED : ஜூன் 16, 2026 08:40 PM

அரியாங்குப்பம்: புதுச்சேரியில் சர்வீஸ் ஸ்டேஷன் மற்றும் சார்ஜ் மையம் அமைக்க கோரி, எலக்ட்ரிக் ஆட்டோ டிரைவர்கள் ேஷாரூமை முற்றுகையிட்டனர்.
பெட்ரோல் விலை உயர்வாலும், சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை கட்டுப்படுத்தவும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதிக சத்தத்துடன் இயங்கும் பெட்ரோல் ஆட்டோவை ஓட்டும் டிரைவர்கள், சத்தம் இல்லாமல் செல்லும் எலக்ட்ரிக் ஆட்டோவிற்கு மாறி வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் மகேந்திரா நிறுவன எலக்ட்ரிக் ஆட்டோ ேஷா ரூம் ரெட்டியார்பாளையம், அரியாங்குப்பம், கிருமாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ளன. இதில், கிருமாம்பாக்கம் ேஷா ரூமில் எலக்ட்ரிக் கார், ஆட்டோக்களுக்கு சர்வீஸ் செய்யப்படுகிறது. இந்த ஒரு இடத்தில் மட்டும் சர்வீஸ் செய்யப்படுவதால், ஆட்டோக்கள் சர்வீஸ் செய்ய மூன்று நாட்களுக்கு மேல் ஆகிறது. இதனால், ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது.
புதிய எலக்ட்ரிக் ஆட்டோ வாங்கும் போது, சர்வீஸ் உடனடியாக செய்து தருவதாகவும், பல இடங்களில் சார்ஜ் ஸ்டேஷன் அமைப்பதாக கூறி ேஷா ரூமில் ஆட்டோ விற்பனை செய்கின்றனர். ஆனால், வசதிகளை செய்யாமல் இருப்பதால், ஆட்டோ டிரைவர்கள் பாதிக்கப்படுவதாக, எலக்ட்ரீக் ஓட்டும் ஆட்டோ டிரைவர்கள் அரியாங்குப்பம் டோல்கேட் பகுதியில் உள்ள ேஷாரூமை நேற்று காலை 10:30 மணிக்கு முற்றுகையிட்டனர்.
தகவலறிந்த அரியாங்குப்பம் போலீசார் அங்கு விரைந்து சென்று, ஆட்டோ டிரைவர்கள் மற்றும் ேஷா ரூம் மேலாளரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். புதுச்சேரியில் சர்வீஸ் ஸ்டேஷனை அதிகப்படுத்த வேண்டும். சார்ஜ் மையங்கள் அமைக்க வேண்டும் என, ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக, ேஷாரூம் மேலாளர் தெரிவித்ததை அடுத்து ஆட்டோ டிரைவர்கள் கலைந்து சென்றனர்.
