துரைமுருகனை நீக்காமல் நீலிக்கண்ணீர் வடிப்பதா: ஸ்டாலினுக்கு பா.ஜ., கேள்வி
துரைமுருகனை நீக்காமல் நீலிக்கண்ணீர் வடிப்பதா: ஸ்டாலினுக்கு பா.ஜ., கேள்வி
ADDED : நவ 04, 2025 04:44 AM

மதுரை: பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன், போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக இருந்தது. தமிழக அரசு இன்றுவரை ஒரு கிராம் அளவுக்குக்கூட 'சிந்தடிக் டிரக்ஸ்' பிடிக்கவில்லை. ஏனென்றால், தி.மு.க.,வைச் சேர்ந்த ஜாபர் சாதிக் தான், அதை உலகம் முழுதும் வினியோகம் செய்தார்.
அடுத்த தலைமுறையை அழிக்கக்கூடிய தீய சக்தியாக முதல்வர் ஸ்டாலின் அரசு உள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடப்பதை தி.மு.க., எதிர்க்கிறது. 11வது முறையாக தற்போது இம்முகாம் நடக்கிறது. 10 முறை நடந்த போதும், இது தொடர்பாக யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
வட மாநில பெண்கள், பன்றிகள் போல பிள்ளை பெற்றுக் கொள்கின்றனர் என, பன்றியோடு வட மாநில பெண்களை ஒப்பிட்டு கேவலமாக பேசியவர் அமைச்சர் துரைமுருகன். அவரை, அமைச்சர் பதவியிலிருந்து முதல்வர் ஸ்டாலின் ஏன் நீக்கவில்லை? ஆனால், இன்று வட மாநிலத்தவருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

