ADDED : செப் 15, 2025 03:40 AM

திருப்பூர்: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ் வரா சுப்ரமணியம் அ றிக்கை:
கோவை, வட மதுரையில் பழமைவாய்ந்த விருந்தீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பேனரில், கோவில் உட்பிரகார மண்டபத்தில் கொம்பு முரசு, உறுமி, சங்கு, பறை, ஜமாப், சிவ வாத்தியம் போன்றவை இசைக்க அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது.
ஹிந்துக்களின் பக்தி என்பது இசையோடு பின்னி பிணைந்தது. இசையால் இறைவனை எழுந்தருள செய்வது, உறங்க செய்வது போன்ற மரபுகள் இன்றளவும் தொடர்கின்றன. இவற்றை போற்றி வளர்க்க வேண்டிய அறநிலையத்துறை, அழித்து வருவது வேதனைக்குரியது.
ஹிந்து கோவில்களின் பாரம்பரியங்களை ஒவ்வொன்றாக அழிக்க நினைக்கும் தமிழக அரசு, தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள எல்லா கோவில்களிலும், ஏற்கனவே உள்ள நடைமுறை பழக்கங்களை மாற்றக்கூடாது; இசை வாத்தியங்கள் முழங்க தடை செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.