UPDATED : செப் 27, 2025 08:51 AM
ADDED : செப் 27, 2025 08:52 AM
சென்னை:
போலீஸ் எஸ்.ஐ., பணிக்கு விண்ணப்பித்துள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு, டிச., 21ல் எழுத்து தேர்வு நடத்தப்பட உள்ளது.
தமிழக காவல் துறைக்கு, 1,299 எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக, சீருடை பணியாளர் தேர்வு வாரியம், ஏப்., 4ம் தேதி அறிவித்தது. இதையடுத்து, அம்மாதம் 7ம் தேதியில் இருந்து, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதையடுத்து, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, ஆக., 18ல் எழுத்து தேர்வு நடத்தப் படும் என, அறிவிக்கப்பட்டது. விண்ணப்பதாரர்கள் தயாராகி வந்த நிலையில், திடீரென எழுத்து தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வு, வரும் டிசம்பர் 21ம் தேதி நடக்க இருப்பதாக, வாரியம் அறிவித்துள்ளது. இதற்காக, மாநிலம் முழுதும், 42 தேர்வு மையங்கள் அமைக்குமாறு, போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு சுற்றிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.