UPDATED : செப் 27, 2025 08:51 AM
ADDED : செப் 27, 2025 08:51 AM
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு வரும் 28ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 2, மற்றும் 2-ஏ தேர்வு வரும் 28ம் தேதி முற்பகல் நடக்கிறது. இத்தேர்வினை கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார் மையங்களாகக் கொண்டு மொத்தம் 9,526 விண்ணப்பதாரர்கள் 33 தேர்வுக் கூடங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
மாவட்டத்தில் நடைபெறும் தேர்வினை நியாயமாக நடத்திடும் வகையில் தேர்வுக் கூடங்களில் தேர்வு பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு 2 கண்காணிப்பு அலுவலர்கள், 1 பறக்கும் படை அலுவலர்கள், 11 சுற்றுக் குழு அலுவலர்கள், 44 தேர்வுக்கூட ஆய்வாளர்கள், 35 வீடியோகிராபர், 48 காவலர்கள் நியமிக்கப்பட்டு தேர்வுகள் முழுதுமாக கண்காணிக்கப்பட உள்ளது.
விண்ணப்பத்தாரர்கள் தேர்வு கூடத்திற்கு காலை 8:30 மணிக்கு வருகை தர வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.