UPDATED : நவ 04, 2025 08:53 AM
ADDED : நவ 04, 2025 08:55 AM

பெங்களூரு:
ஏ.ஐ., போன்ற தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்காக மாநில அரசு 600 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.
பெங்களூரு விதான் சவுதாவில் அவர் அளித்த பேட்டி:
ஏ.ஐ., மிஷின் லேர்னிங், குவாண்டம் கம்ப்யூட்டிங், ரோபோடிக்ஸ் போன்றவற்றில் 600 கோடி ரூபாய் மாநில அரசு முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் டீப்பேக் தொழில்நுட்பத்தில் நாட்டிலேயே கர்நாடகா முன்னிலை வகிக்கும். ஹூப்பள்ளி, தார்வாட், கலபுரகியில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 80 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.
பெங்களூரு திறன் உச்சி மாநாட்டில் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, 500க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள், 20,000 பிரதிநிதிகள், 1,000 கண்காட்சியாளர்கள், 50,000 வணிக பார்வையாளர்கள் கலந்து கொள்வர்.
ஏ.ஐ.,யால் ஏற்படும் பாதிப்பு குறித்து 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் கலந்து ஆலோசித்து உள்ளோம். அவர்களும் சில தீர்வுகளை வழங்கி உள்ளனர். இது குறித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

