தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளில் சுகாதாரத்தை உறுதி செய்யுங்கள் மாநகராட்சி கமிஷனர் சமீரன் உத்தரவு

பள்ளிகளில் சுகாதாரத்தை உறுதி செய்யுங்கள் மாநகராட்சி கமிஷனர் சமீரன் உத்தரவு

பள்ளிகளில் சுகாதாரத்தை உறுதி செய்யுங்கள் மாநகராட்சி கமிஷனர் சமீரன் உத்தரவு


UPDATED : மே 31, 2026 12:08 PM

ADDED : மே 31, 2026 12:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2026 12:08 PM ADDED : மே 31, 2026 12:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
'பள்ளிகள் திறக்கப்பட உ ள்ளதை தொடர்ந்து, குடிநீர் தொட்டிகள், கழிப்பறைகள் உள்ளிட்டவை சுகாதாரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்' என, மாநகராட்சி கமிஷனர் சமீரன் அறிவுறுத்தி உள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:



சென்னை மாநகராட்சி பள்ளிகளில், மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்யும் வகையில், அனைத்து மேல்நிலை மற்றும் நிலத்தடி நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தமாக பராமரிப்பதுடன், நீர்க்கசிவுகளையும் சரிசெய்து, மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளை துாய்மையாக பராமரிக்க வேண்டும்.

இவற்றை, மண்டல அலுவலர்கள் பார்வையிட்டு உறுதி செய்ய வேண்டும். மின் விசிறிகள், மின்விளக்கு பொத்தான்கள், மின்சார மணி, ஜெனரேட்டர் உள்ளிட்ட மின் சாதனங்கள் முறையாக பராமரித்து, பள்ளி வளாகங்களில் தேன் கூடுகள், பூச்சி கூடுகள் இல்லாமல் இருப்பதை, பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

பள்ளிகள் திறப்பிற்கு இரண்டு நாட்களுக்கு முன், சமையலறை சுத்தம் செய்து, காலாவதியான மற்றும் தரம் குறைந்த பொருட்களை அகற்ற வேண்டும்.

பள்ளி திறந்த மாணவர்களுக்கு காலை, மதிய உணவுகள், குடிநீர் போன்றவை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us