ஏபிவிபி வெற்றி தேசமே முதன்மை என்ற நம்பிக்கையின் பிரதிபலிப்பு: அமைச்சர் அமித் ஷா
ஏபிவிபி வெற்றி தேசமே முதன்மை என்ற நம்பிக்கையின் பிரதிபலிப்பு: அமைச்சர் அமித் ஷா
UPDATED : செப் 19, 2025 11:13 PM
ADDED : செப் 19, 2025 06:09 PM

புதுடில்லி: டில்லி பல்கலை. மாணவர் சங்க தேர்தலில் ஏபிவிபி பெற்ற வெற்றியானது, தேசமே முதன்மையானது என இளைஞர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் பிரதிபலிப்பு என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.
-டில்லி பல்கலை. மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவி, செயலாளர், இணை செயலாளர் உள்ளிட்ட முக்கிய பல பொறுப்புகளில் பாஜ மாணவர் அமைப்பான ஏபிவிபி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களின் வெற்றியை தொண்டர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கொண்டாடி வருகின்றனர்.
இந் நிலையில் ஏபிவிபி வெற்றி குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது: டில்லி பல்கலை. மாணவர் சங்க தேர்தலில் ஏபிவிபியின் சார்பில் மகத்தான வெற்றியை பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றியானது தேசம் தான் முதலில் என்ற சித்தாந்தத்தின் இளைஞர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையின் பிரதிபலிப்பு ஆகும். இந்த வெற்றி மாணவர் சக்தியை, தேசிய சக்தியாக மாற்றும் பயணத்தை வேகப்படுத்தும். இவ்வாறு அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.