எல்லாவற்றையும் பிரச்னையாக்குவதா? சுரேஷ் கோபி வேதனை
எல்லாவற்றையும் பிரச்னையாக்குவதா? சுரேஷ் கோபி வேதனை
ADDED : செப் 18, 2025 06:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சூர்: கேரள எம்.பி.,யான மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியிடம், வீடு கட்ட உதவி கேட்டு வேலாயுதன் என்பவர் மனு கொடுத்தார். ஆனால், அதை சுரேஷ் கோபி நிராகரித்த, வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினரும் விமர்சித்தனர்.
இது குறித்து சுரேஷ் கோபி கூறுகையில், ''கவனக்குறைவால் நிகழும் தவறை கூட, சிலர் தங்களது அரசியல் ஆதாயத்திற்காக பெரிதுபடுத்துகின்றனர். அவ்வாறு விமர்சிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் அனை வருக்கும், வீடு கட்டி தர வேண்டும்,'' என்றார்.