sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்


ADDED : மே 23, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 04:31 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சொல்கிறார்கள்/ 24/05/26 ஞாயிறு 1 இதழ்

-–––––––––

அவள் விகடன், ஏப்., 07.2026. பக்:58

விடாமுயற்சி

உழைப்பால்

வெற்றி சாத்தியம்!

–––––––––

‘விலாஸ் கேக் பொட்டிக்’ என்ற பெயரில், வீட்டிலேயே கேக் செய்து விற்பனை செய்து வரும் திருப்பூரை சேர்ந்த, 26 வயதான, விலாசினி:

நான் கல்லுாரி படித்துக் கொண்டிருந்தபோது, எங்கள் குடும்ப பொருளாதார நிலை திடீரென மோசமானது. நாமும் ஏதாவது செய்ய வேண்டுமே என்று தோன்றியபோது தான், கேக் செய்யும் தொழிலை துவங்கினேன். ஆரம்பத்தில், கேக் செய்தபோது சரியாக வரவில்லை.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், இப்போது போல இணையதள வசதிகளோ அல்லது செய்முறை விளக்க காணொளிகளோ கிடையாது. ஆனாலும், பலமுறை தோல்வி அடைந்த பின், கடும் முயற்சி செய்து, கேக் தயாரிப்பை கற்றுக் கொண்டேன்.

ஆரம்பத்தில், வீட்டில் உள்ளோர் பொருட்களை வீணாக்குவதாக திட்டினர். கல்லுாரி விடுமுறை நாட்களில், நான் செய்த கேக்குகளை, என் தோழியரும், அக்கம் பக்கத்தாரும் பாராட்டியபோது எனக்குள் நம்பிக்கை துளிர்விட்டது.

என் கல்லுாரி விடுதியில் உள்ள சக தோழியரின் பிறந்தநாள் விழாக்களுக்கு கேக் தயாரித்து, விற்பனை செய்ய துவங்கினேன். அதன் வாயிலாக கிடைத்த வருமானத்தை என் செலவுக்கும், வீட்டு செலவுக்கும் பயன்படுத்திக் கொண்டேன். கொரோனா காலத்தில், கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த போதுதான், என் வியாபாரம் வளர்ச்சி அடைந்தது.

சமூக வலைதளங்கள் வாயிலாக, ‘ஆர்டர்’கள் நிறைய வந்தன. குறிப்பாக, நான் அறிமுகப்படுத்திய, ‘ரோஸ் மில்க் கேக்’ என் அடையாளமாகவே மாறியது. ஆரம்பத்தில், தொழிலுக்கு தேவையான பொருட்களை தவணை முறையில் வாங்கி, என் உழைப்பிலேயே கடனை அடைத்தேன்.

தற்போது, வீட்டில் இருந்தபடியே கேக் தயாரித்து விற்பனை செய்கிறேன். 10 பேக்கரிகளுக்கு கேக் தயாரித்து கொடுக்கிறேன். இந்த பொருளாதார சுதந்திரம் எனக்கு பிடித்திருக்கிறது. எல்லா பெண்களும், இதே சுதந்திரத்தை விடாமுயற்சி மற்றும் உழைப்பால் அடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் தான், மற்றவர்களுக்கும் கேக் தயாரிப்பை கற்றுக் கொடுக்கிறேன். இதுவரை, 400 பேருக்கு கற்றுக் கொடுத்துள்ளேன்.

கேக் தயாரிப்பு, பயற்சி வகுப்பு என மாதம் 80,000 ரூபாய் வரை வருமானமும், லாபமாக 40,000 ரூபாயும் கிடைத்து வருகிறது. தொழில் வெற்றியை விட, தனிப்பட்ட முறையில் இது இன்னும் ஆத்ம திருப்தியை அளிக்கிறது. ‘நல்ல வேலைக்கு போ... கேக் தயாரித்து விற்பனை செய்வதெல்லாம் உனக்கு தேவையா?’ என்று, பலரும் ஆரம்பத்தில் நம்பிக்கை குறைவாக பேசினர். ஆனால், இன்று என் வெற்றியை ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

நம் உள்ளுணர்வு சொல்வதை துணிச்சலாக செய்தபடியே இருக்க வேண்டும்; தயங்கினால், வெற்றி வசப்படாது!

தொடர்புக்கு: 90802 64137

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us