தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ 24 மணி நேரமும் அலுவலகம் செயல்படும் கேரள பா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜீவ் பேட்டி

 24 மணி நேரமும் அலுவலகம் செயல்படும் கேரள பா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜீவ் பேட்டி

 24 மணி நேரமும் அலுவலகம் செயல்படும் கேரள பா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜீவ் பேட்டி


ADDED : மே 23, 2026 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 05:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேமம்: கேரளாவில், நேமம் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சியின் மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர், ''ஆம்புலன்ஸ் வசதியுடன், 24 மணி நேரமும் எம்.எல்.ஏ., அலுவலகம் செயல்படும்,'' என்றார்.

நன்றி கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்., கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, காங்., மூத்த தலைவர் வி.டி.சதீசன் முதல்வராக பதவியேற்றார்.

ஆளுங்கட்சியாக இருந்த இடதுசாரி கூட்டணி, 32 இடங்களில் வென்றது. நேமம், கழகூட்ட ம், சாத்தனுார் ஆகிய மூன்று தொகுதிகளை பா. ஜ., கைப்பற்றியது.

இதில், நேமம் தொகுதியில் பா.ஜ., மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர், 61, வென்றார். இந்நிலையில், நேமம் தொகுதி வாக்காளர்களை சந்தித்து எம்.எல்.ஏ., ராஜீவ் சந்திரசேகர் நேற்று முன்தினம் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, அவர் பேசியதாவது:

நேமம் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் புனரமைக்கப்பட்டு வருகிறது. ஜூன் முதல் இந்த அலுவலகம், 24 மணி நேரமும் செயல்படும்.

நம்பிக்கை இங்கு, ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் மருத்துவ அவசரங்களின் போது சரியான நேரத்தில் வாகன வசதி கிடைக்காமல் தவிக்கும் நோயாளிகளுக்கு, இந்த ஆம்புலன்ஸ் சேவை உதவியாக இருக்கும்.

பொதுமக்கள் வாரத்திற்கு இரண்டு முறை இந்த எம்.எல்.ஏ., அலுவலகத்திலும், வாரத்திற்கு ஒருமுறை பா.ஜ., மாநில தலைமை அலுவலகத்திலும் என்னை சந்திக்கலாம்.

தொகுதிக்கான வளர்ச்சிப் பணிகளை முன்னின்று செய்வேன். முன்மாதிரி தொகுதியாக நேமத்தை மாற்றுவேன். தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்.

என் மீது நம்பிக்கை வைத்து ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us