தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மிமிக்ரி பறவை!

மிமிக்ரி பறவை!

மிமிக்ரி பறவை!


PUBLISHED ON : ஜூன் 13, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 13, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மழைக்காடுகளில் காணப்படும் பறவையினம், லைர் பேர்ட். தமிழில், 'யாழ்பறவை' என பெயரிட்டுள்ளது, விக்கிபீடியா. இயற்கையின் பேரதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது. வீட்டில் வளர்க்கும் கோழி அளவில் அடர் சாம்பல் நிறத்தில் இருக்கும். இறகுகளுடன் நீண்ட வால் உடையது ஆண் பறவை. அதை விரிக்கும் போது, பழங்கால இசைக் கருவியான, 'லைர்' வடிவத்தில் காட்சி தரும். அதனால் தான், லைர் பேர்ட் என, பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கேட்கும் ஒலியை அப்படியே, 'மிமிக்ரி' செய்யும் திறன் உடையது. காட்டில் மற்ற பறவை குரல்களை மட்டுமின்றி, இயந்திரங்கள் இயங்கும் போது ஏற்படும் சத்தத்தையும், தத்ரூபமாக பிரதிபலிக்கும். மரம் அறுக்கும் ரம்ப சத்தம், கேமரா கிளிக்கிங், வாகனங்களில் ஹார்ன் ஒலிப்பது மற்றும் மனிதர்கள் பேசுவது போல் சில சொற்களை, அப்படியே திரும்ப சொல்லும் திறன் உடையது.

இந்த பறவை, மிமிக்ரி செய்ய இரண்டு முக்கிய காரணங்கள் அறிஞர்களால் கூறப்படுகிறது.

முதலில் ஆண் பறவை, தன் மிமிக்ரி திறமையை முன் வைத்தே, பெண் பறவையை ஈர்க்கிறது. இதற்காகவே, கேட்கும் புதிய ஒலிகளை எல்லாம் கற்று கொண்டே இருக்கிறது. காட்டில் தன் எல்லைக்குள் பிற பறவைகள் வராமல் தடுப்பதற்காக, புதிய ஒலிகளை பயன்படுத்துகிறது, இந்த பறவை. பிற பறவைகளின் குரல்களை ஒரே நேரத்தில் எழுப்புவதன் வாயிலாக, சூழலில் ஒரு மாயையை உருவாக்குகிறது. இதனால் எதிரியின் பார்வையை, திசை திருப்புகிறது.

எதிரியை பயமுறுத்தி கூட்டை பாதுகாக்கும் வகையில், பெண் பறவை மிமிக்ரி செய்வதும் கண்டறியப்பட்டுள்ளது.

நிலத்தில் வாழ்கிறது இப்பறவை. வீழ்ந்து கிடக்கும் உலர்ந்த இலைகளை கிளறி, பூச்சி, புழுக்களை வேட்டையாடி உண்ணும். இனப்பெருக்க காலத்தில், தரையில் மேடை போன்ற அமைப்பை உருவாக்கும் ஆண் பறவை. அழகிய நீண்ட வாலை தலைக்கு மேல் குடை போல விரித்து, விதவிதமான ஒலிகளை எழுப்பி நடனமாடும். இது, பெண் பறவையை கவர்வதற்கான வழிமுறை என கணித்துள்ளனர், பறவையியல் அறிஞர்கள்.

- ஆறாம் தம்புரான்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us