/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
திருட்டு தம்பதியிடம் வீட்டை எழுதி வாங்கிய அதிகாரி!
/
திருட்டு தம்பதியிடம் வீட்டை எழுதி வாங்கிய அதிகாரி!
திருட்டு தம்பதியிடம் வீட்டை எழுதி வாங்கிய அதிகாரி!
திருட்டு தம்பதியிடம் வீட்டை எழுதி வாங்கிய அதிகாரி!
PUBLISHED ON : செப் 26, 2025 12:00 AM

நா ட்டு சர்க்கரை டீக்கு ஆர்டர் தந்தபடியே, ''முதல்வர் படத்துடன் நவராத்திரி கொலு வச்சிருக்காங்க வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''மறைந்த பத்திரிகை யாளர் சோ ராமசாமியின் உறவினரான மாயா மோகன், ஊட்டச்சத்து நிபுணரா இருக்காங்க... இவங்க, சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டுல கொலு வச்சிருக்காங்க...
''இவங்க, முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துக்கு நெருக்கமான வங்க... இதனால, தன் வீட்டு கொலுவில் முதல்வர் ஸ்டாலின் படத்துடன், தலைமை செயலக கட்டடத்தின் மீது உதய சூரியன் உதிப்பது போலவும், தி.மு.க., கொடி பறப்பது மாதிரியும் அலங்கரிச்சு வச்சிருக்காங்க வே...
''தி.மு.க., எதிரிகளை வெல்லும் வகையில் துர்க்கை, லட்சுமி தேவி சிலைகளை வடிவமைச்சிருக்காங்க... ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலர், குடும்பத்துடன் வந்து கொலுவை பார்த்து, வாழ்த்து சொல்லிட்டு போறாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''அமைச்சரை சுத்தமா மறந்துட்டாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''அமைச்சரையே மறக்கற அளவுக்கு துணிச்சலானவா யார் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''சென்னை பெருநகர் போக்குவரத்து குழும மான, 'கும்டா' சார்பில், ஒரே டிக்கெட்டில் ரயில், பஸ், மெட் ரோவில் பயணிக்க, 'சென்னை ஒன்' என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி இருக்காங்க... இதன் அறிமுக விழா, சமீபத் துல தலைமை செயலகத் தில் நடந்துச்சு பா...
''இதுல, வீட்டுவசதி துறை அமைச்சர், செயலர், சென்னை மேயர் எல்லாம் கலந்துக் கிட்டாங்க... அதே நேரம், சி.எம்.டி.ஏ., தலைவரான அமைச்சர் சேகர்பாபுவுக்கு இந்த நிகழ்ச்சி சம்பந்தமா அதிகாரிகள் எந்த தகவலும் தரல பா...
''விஷயத்தை கேள்விப்பட்டு அமைச்சர் அதிர்ச்சியாகிட்டாரு... அதிகாரிகளிடம், 'எனக்கு ஏன் தகவல் தரல... அழையா விருந்தாளியா தான் நான் வரணுமா'ன்னு கேட்டு, 'டோஸ்' விட்டிருக்காரு...
''தலைமை செயலக அதிகாரிகளும், 'சி.எம்.டி.ஏ., தலைவருக்கு தெரிவிக்காம, கும்டா அதிகாரிகள் எப்படி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ் சாங்க'ன்னு ஆதங் கப்பட்டிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில் நடந்த திருட்டு பத்தி தெரியுமா ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''தெரியாதே வே...'' என்றார், அண்ணாச்சி.
''சென்னை கோட்டூர் புரத்தில் ஐ.ஏ.எஸ்., அதி காரி ஒருத்தர் குடியிருக்கார்... சமீபத்துல இவரது வீட்டுல, 4.50 லட்சம் ரூபாய் திருடு போயிடுத்துன்னு போலீஸ்ல புகார் குடுத்தா ஓய்...
''போலீசாரும் வழக்கு பதிவு பண்ணாம விசாரிச்சிருக்கா... இதுல, திருடு போனது, 4.50 கோடி ரூபாய் என்பதும், அதிகாரியின் டிரை வரும் , அதே வீட்டில் வேலை செய்த டிரைவரின் மனைவியுமே அதை திருடியதும் தெரிஞ்சது ஓய்...
''இவா, அப்பப்ப அதிகாரி வீட்டுல இருந்து லட்சம் லட்சமா திருடி, தங்களது சொந்த ஏரியாவுல பிரமாண்ட வீட்டையே கட் டிட்டா... அவாளை பிடிச்சு விசாரிச்சிருக்கா... அவாளால பணத்தை திருப்பித் தர முடியாத சூழல்ல, அவா வீட்டை அதிகாரி தரப்பு எழுதி வாங்கி, பிரச்னையை கமுக்கமா முடிச்சுடுத்து ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெஞ்சில் புதியவர்கள் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.