/தினம் தினம்/சொல்கிறார்கள்/ சாக்லேட்டுக்கு எப்போதும் மவுசு குறையாது!

 சாக்லேட்டுக்கு எப்போதும் மவுசு குறையாது!

 சாக்லேட்டுக்கு எப்போதும் மவுசு குறையாது!

 சாக்லேட்டுக்கு எப்போதும் மவுசு குறையாது!

 சாக்லேட்டுக்கு எப்போதும் மவுசு குறையாது!

PUBLISHED ON : ஏப் 04, 2026 03:41 AM


Google News
Latest Tamil News
'ஷோபனாஸ் சாக்லேட் அகாடமி'யை நடத்தி வரும் சென்னை கொரட்டூரை சேர்ந்த, 36 வயதான ஷோபனா ஹரிராஜன்:

எனக்கும், என் குழந்தைகளுக்கும் சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். அதை வீட்டிலேயே செய்து கொடுக்கும் எண்ணத்தில் கடந்த, 15 ஆண்டு களுக்கு முன்பே முறைப்படி கற்றுக் கொண்டேன்.

வகுப்பில் கற்றுக் கொண்டது போக, சமூக வலைதளங்களிலும் கற்றுக் கொண்டேன்.

அது குறித்த காணொளிகளையும் பார்த்து, பல சந்தேகங்களையும் நிவர்த்தி செய்த படியே இருந்தேன்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் சாக்லேட் தயாரித்து, விற்பனை செய்ய துவங்கினேன்.

தொடர்ந்து சாக்லேட் செய்வதற்கான வகுப்புகளையும் நடத்தி வருகிறேன். 1,000 ரூபாய் முதலீட்டில், வீட்டிலேயே சாக்லேட் வியாபாரம் துவங்கி விட முடியும்.

பொதுவாக பயிற்சியில், 20 வகையான சாக்லேட் வரை கற்றுக்கொள்ள முடியும்.

அந்த அடிப்படையைப் பின்பற்றி, 50 வகையான சாக்லேட்டுகள் வரை தயாரிக்க முடியும். உங்கள் கற்பனைத் திறனுக்கேற்ப புதிய புதிய வடிவங்கள், ருசிகளையும் உருவாக்கலாம்.

ஆரம்பத்தில் நண்பர்கள், உறவினர்களிடம் மாதிரிகள் கொடுக்கலாம். அருகிலிருக்கும். கடைகளை அணுகி, விற்பனைக்கும் கொடுக்கலாம்.

பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் சிறிய மேஜை போட்டும், விற்பனையை துவங்கலாம்.

உங்கள் தயாரிப்புகள் பிடித்துவிட்டால், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் ஆர்டர் எடுத்தும் விற்பனை செய்யலாம்.

பிறந்த நாள், வளைகாப்பு, நிச்சயதார்த்தம், திருமணம் என எந்த சுபநிகழ்ச்சியாக இருந்தாலும், சாக்லேட்டுக்கு தேவை இருக்கும் என்பதால், இந்த வியாபாரத்திலும் கவனம் செலுத்தலாம்.

மொத்த ஆர்டர்களுக்கு நபர்களை அணுகும்போது, மாதிரி சாக்லேட்டுகளை கொடுக்க வேண்டும். பொதுவாக, சாக்லேட் விற்பனையில், 50 சதவீதம் லாபம் பார்க்கலாம்.

அதாவது, 250 ரூபாய்க்கு மூலப்பொருட்களை வாங்கினால், தயாரிப்புகளை, 500 ரூபாய்க்கு விற்கலாம்.

கணிசமாக ஆர்டர் கிடைத்தால், செலவுகள் போக மாதம், 30,000 - 40,000 ரூபாய் வரை தாராளமாகச் சம்பாதிக்க முடியும். சாக்லேட்டுக்கு எப்போதும் மவுசு குறையாது!

தொடர்புக்கு:

99401 24314