/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'உட்கட்சி 'பஞ்சாயத்தை' முடிக்கணும்!'
/
'உட்கட்சி 'பஞ்சாயத்தை' முடிக்கணும்!'
PUBLISHED ON : செப் 15, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'தி.மு.க., எனும் தீய சக்தியை அப்புறப்படுத்த வேண்டும் என்று தான், அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கினார்; அண்ணா துரையை அரசியல் ஆசானாக நினைத்தார். எம்.ஜி.ஆரை ஜெயலலிதாவும், அவர் மறைவுக்கு பின் ஜெயலலிதாவை பழனிசாமியும் அரசியல் ஆசானாக நினைத்து, அ.தி.மு.க.,வை வழிநடத்துகின்றனர்.
'தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்றால், அது, அ.தி.மு.க.,வால் தான் முடியும் என்று தேசிய கட்சிகள், மாநில கட்சிகளுக்கு தெரிகிறது. அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கியை யாரும் சிதைக்க முடியாது. தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வுக்கும், தி.மு.க.,வுக்கும் தான் போட்டி...' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'இவங்க முதல்ல உட்கட்சி 'பஞ்சாயத்தை' முடிச்சா தான், தி.மு.க.,வுடன் சரிக்கு சமமா தேர்தல் களத்தில் நிற்க முடியும்...' என முணு முணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.