PUBLISHED ON : மே 06, 2026 01:19 AM

ராமநாதபுரம், முதுகுளத்துார், திருவாடானை, பரமக்குடி ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை, ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரியில் சமீபத்தில் நடந்தது. தேர்தல் பணிக்கு ஒதுக்கப்பட்ட அலுவலர்கள், காலை 6:30 மணி முதல், ஒவ்வொருவராக மையத்திற்கு வர துவங்கினர்.
அப்போது, தள்ளாடியபடி வந்த ஓர் அலுவலரை போலீசார் நிறுத்தினர். விசாரணையில், மது அருந்திவிட்டு அவர் பணிக்கு வந்தது தெரிந்தது. உடனே, அவரை வெளியே அனுப்பினர்.
அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர், 'என்னதான் டாஸ்மாக் கடைகளை அடைச்சாலும், அதிகாலையிலே எப்படிதான் போதை ஏத்திக்கிறாங்களோ...' என அலுத்துக் கொண்டார்.
சக போலீஸ்காரர், 'நமக்கு காலையில் எழுந்ததும் காபி குடிக்கிற மாதிரி, இவங்களுக்கு, 'சரக்கு' அடிக்கணும்... அதனால, முதல் நாளே வாங்கி வச்சிருப்பாங்கப்பா...' எனக்கூற, சக போலீசார் சிரித்தனர்.
