/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'இனி ஓட்டுக்கு பணம் இருக்காது!'
/
'இனி ஓட்டுக்கு பணம் இருக்காது!'
PUBLISHED ON : மே 07, 2026 01:52 AM

த.வெ.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் செங் கோட்டையன், சமீபத்தில் கோவையில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'த.வெ.க.,வுக்கு கிடைத்த வெற்றிக்கு காரணம், விஜய் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பும், ஆதரவும் தான். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா துவங்கிய இயக்கம் நிலைத்து நின்றது. இப்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது. நாம் ஒன்று நினைத்தால், தெய்வம் யார் என்பதை காட்டிவிடும். தெய்வத்தால் ஆகாதது ஒன்றுமில்லை.
'த.வெ.க., மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. இந்தியாவி லேயே முதல் முறையாக ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றி பெற்று, இந்திய வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. தொலை நோக்கு பார்வை, மனிதநேயம் அனைத்தும் விஜயிடம் உள்ளது; அவரது ஆட்சி சிறப்பாக இருக்கும்' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'விஜய் கட்சி வெற்றியால், இனி ஓட்டுக்கு பணம் தரும் கலாசாரம் ஒழிஞ்சிடும் பா...' என, முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.

