PUBLISHED ON : ஏப் 06, 2026 03:18 AM

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளராக, ஜெயராமன், மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பிரச்சாரத்துக்கு வந்த அவருக்கு, கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அவரிடம், தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், 'உள்ளூரில் விலை போகாமல் வெளியூருக்கு வந்துள்ள செந்தில் பாலாஜியின் சாயம், ஓட்டு எண்ணிக்கையில் வெளுத்து போகும். கரூரில் நின்றால், 'டிபாசிட்' காலியாகி விடும் என்று இங்கு வந்து நிற்கிறார். ஆனால், இங்கு, அதை விட மோசமாக இருக்கும்... இனி எந்த காலத்திலும், அவர் வெற்றி பெற முடியாது' என்றார்.
இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'நம்ம அண்ணன் மட்டும் தான், 2001ல் இருந்து இங்க போட்டியிட்டு, பொள்ளாச்சியை, அ.தி.மு.க., கோட்டையா மாத்தி வச்சிருக்காரு...' என கூற, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.
