sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 11, 2026 ,பங்குனி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

 'இது போதும்னு நினைக்கிறாரா?'

/

 'இது போதும்னு நினைக்கிறாரா?'

 'இது போதும்னு நினைக்கிறாரா?'

 'இது போதும்னு நினைக்கிறாரா?'

2


PUBLISHED ON : ஏப் 07, 2026 03:05 AM

Google News

PUBLISHED ON : ஏப் 07, 2026 03:05 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக, தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மீண்டும் போட்டியிடுகிறார்; சமீபத்தில் இவர் சிவன்மலையில் பிரச்சாரம் செய்தார்.

சாமிநாதனை ஆதரித்து, ஈரோடு தி.மு.க., - எம்.பி., பிரகாஷ் பேசுகையில், 'நம் வேட்பாளரை வெற்றி பெற செய்ய, இளைஞர்கள் தீவிரமாக வேலை செய்ய வேண்டும். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், இரண்டு முதல் ஐந்து ஓட்டுகள் நாம் முன்னிலை பெற வேண்டும். அப்போது தான், நாம் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற முடியும்' என்றார்.

இதை கேட்ட கட்சி நிர்வாகி ஒருவர், 'காங்கேயம் தொகுதியில், 318 ஓட்டுச்சாவடிகள் இருக்கு. ஒரு ஓட்டுச்சாவடியில இரண்டு முதல் ஐந்து ஓட்டுகள் முன்னிலை என்றாலும், 716 முதல் 1,590 ஓட்டுகள் தானே கூடுதலா வரும்... இந்த ஓட்டுகள் வித்தியாசத்துல அமைச்சர் ஜெயிச்சா போதும்னு எம்.பி., சொல்றாரா...?' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் சிரித்தனர்.






      Dinamalar
      Follow us