PUBLISHED ON : மே 31, 2026 12:12 AM

கோவை, கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., கனிமொழி, வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து ஆய்வு கூட்டம் நடத்தியதற்காக, சொந்த கட்சியினரே கண்டனம் தெரிவித்தனர்.
'அது வீடு இல்லை; அலுவலகம்' என்று சமாளித்தாலும், அவர் மீது தலைமை கடும் கோபத்தில் உள்ளதாம். அவரது அலுவலகத்திற்கு வந்த பலரிடம், 'நான் அமைச்சராக போகிறேன்; கட்சி தலைமையில் சொல்லிட்டாங்க' என்று, 'பில்டப்' கொடுத்துள்ளார்.
இது, தலைமையின் காதுக்கு போகவே, அவருக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை; பதவி கிடைக்காததால், தற்போது அவரது அலுவலகம் பக்கம் கட்சியினர் யாரும் செல்லாமல் காற்றாடுகிறது.
சமீபத்தில் அங்கு வந்த த.வெ.க., தொண்டர் ஒருவர், 'ஆளே இல்லாத டீக்கடை மாதிரி ஆகிடுச்சே...' என முணுமுணுத்தபடியே அங்கிருந்து கிளம்பினார்.
