PUBLISHED ON : மே 30, 2026 12:00 AM

சென்னை, திருவொற்றியூர் குப்பத்தில் உள்ள சூரை மீன்பிடி துறைமுக வளாகத்தை, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத் சமீபத்தில் ஆய்வு செய்தார்.
அவரிடம், துறைமுகத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்குவதற்காக வரைபடங்களுடன் அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனால், அதற்குள் அமைச்சர் ஸ்ரீநாத்தை, ஆளுங்கட்சியை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் சூழ்ந்து கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டனர்.
பின், துறைமுக பகுதிக்கு அவசர அவசரமாக சென்ற அமைச்சர், படகுகளை பார்வையிடுவது போல், போட்டோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு, ஒரு சில நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பினார்.
இதை பார்த்த மீனவர் ஒருவர், 'எங்களிடம் குறைகளை கேட்காமலே அமைச்சர் சென்று விட்டாரே' என புலம்பினார். இதை கேட்ட தி.மு.க., தொண்டர் ஒருவர், 'எங்க ஆட்சியை போட்டோஷூட் ஆட்சின்னு விமர்சனம் செஞ்சீங்களே... இந்த ஆட்சியிலும் அதானே நடக்குது...' என, முணுமுணுத்தபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
