தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ மாற்றத்தை தந்துள்ளது தேர்தல் முடிவு!

 மாற்றத்தை தந்துள்ளது தேர்தல் முடிவு!

 மாற்றத்தை தந்துள்ளது தேர்தல் முடிவு!

5


PUBLISHED ON : மே 12, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 12, 2026 12:00 AM

5


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாநிலத்தை ஆளப் போகும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்கு காம ராஜரையும், எப்படி ஆட்சி செய்யக்கூடாது என்பதற்கு ஸ்டாலினையும், 'ரோல் மாடலாக' எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதேநேரம் இத்தேர்தல் முடிவிலிருந்து தமிழக அரசியல் கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்...

 ஆளுங்கட்சி என்ற ஆணவத்தில் குறுகிய சிந்தனையுடன் ஆட்சி செய்தால், எவராக இருந்தாலும் மக்கள் துாக்கி எறிய தயங்கமாட்டார்கள் என்ற உண்மையை, 'ஸ்டாலின் அண்டு கோ'வினர் புரிந்து கொள்ளவேண்டும்!

 தான் என்ற ஆணவத்தில், நிதர்சனம் மறந்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்ற பாடத்தை, இனியேனும் மனதில் கொள்ள வேண்டும்

 தமிழகம் இந்தியாவின் ஓர் அங்கம் என்பதை மறந்து, 'தமிழ் தேசியம்' என்ற காலாவதியான கொள்கையை முன்னிறுத்தி, பிரிவினைவாதம் பேசுவது, அரசியல் சூட்சுமம் தெரியாமல், 'எவருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து பயணிப் பேன்' என்று வீர வசனம் பேசுவது போன்ற காரணங்களால், தற்போது, தமிழ க மக்களால் முற்றிலும் புறக்கணிக்கப் பட்டுள்ளதை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான் உணர வேண்டும்

 தமிழகத்தில் பா.ஜ., என்று ஒரு கட்சி இருப்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த துடிப்பான, நேர்மையான இளைஞரான அண்ணாமலையை புறக்கணித்தால், கட்சி செல்லாக்காசாகிவிடும் என்பது, இத்தேர்தலின் வாயிலாக பா.ஜ., தேசிய தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!

மொத்தத்தில், ஊழலில் திளைத்த இரு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, ஒரு கட்சி வராதா என்று ஏங்கிக்கொண்டிருந்த தமிழக மக்களுக்கு, மிகப்பெரிய மாற்றத்தை தந்திருக்கிறது, 2026 தேர்தல் முடிவு!



தனித்து களம் கண்டால் கட்சியாவது வளரும்! கி.சந்தானகிருஷ்ணன், சென்னை-யில் இருந்து அனுப் பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசியல் கட்சிகளில், நம்பகத்தன்மை அற்ற கட்சி கள் எது என்று கேட் டால், அது, அ.தி.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., தான்!

கடந்த 1998ல் பா.ஜ., கூட்டணியில் இருந்த ஜெயலலிதா, தன் மீதான வழக்குகளை திரும்பப் பெறவும், அப்போது இருந்த கருணாநிதி அரசை கலைக்க வேண்டும் என்றும், அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம் வலியுறுத்தினார்.

அவர் மறுத்து விடவே, தன் ஆதரவை திரும்ப பெற்று, வாஜ்பாய் ஆட்சியை, 13 மாதத்தில் கவிழ்த்தார்.

அவர்தான் அப்படி என்றால், 2021 சட்டசபை தேர்தலில், பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., பா.ஜ.,விற்கு 21 இடங்களை கொடுத்தது. ஆனாலும், தங்கள் ஓட்டு பா.ஜ.,விற்கு செல்வதை தடுக்கும் விதமாக, தி.மு.க.,வுடன் சேர்ந்து உள்ளடி வேலை செய்தது.

பா.ஜ., வேட்பாளர்கள் நான்கு பேரும் தங்கள் சொந்த பலத்தில் தான் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலிலோ, அந்த நான்கையும் ஒன்று என ஆக்கிய பெருமையும், அ.தி.மு.க.,வையே சேரும்.

அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் பா.ஜ., எந்த வகையிலும் இடையூறாக இருந்துவிடக் கூடாது என்று, திட்டமிட்டே பா.ஜ., பலமில்லாத தொகுதிகளை ஒதுக்கிய பழனிசாமியின் சுயநலம் தான், இன்று எதிர்க்கட்சி தலைவராக கூட ஆக முடியாமல், கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி நிற்க வைத்துள்ளது.

இதேபோன்று தான் பா.ம.க.,வும்!

அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த பா.ம.க., அப்போதைய முதல்வர் பழனிசாமியை பலவந்தப்படுத்தி, வன்னியருக்கு உள் ஒதுக்கீடு அரசாணை பிறப்பிக்க வைத்து, தேர்தலில் அ.தி.மு.க., தோற்கவும், தி.மு.க., ஆட்சிக்கு வரவும் காரணமானது!

அடுத்து, தே.மு.தி.க., தலைவி பிரேமலதா!

இவரைப் போன்ற சுயநலம் பிடித்த அரசியல் வாதியை பார்க்க முடியாது. இவரது கூட்டணி பேரமே, பை நிறைய பணம்; குடும்ப உறுப்பின ருக்கு பதவி என்பதாகத் தான் இருக்கிறது.

தன் குடும்பத்தினர் பதவி பெறுவதற்காக மட்டுமே கட்சி நடத்தும் இந்த தியாக தலைவி, பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழி!

த.வெ.க., பொதுக்கூட்டத்தில் நடிகர் விஜய காந்த் பெயரை விஜய் சொன்னதற்கே வரிந்து கட்டிக் கொண்டு வந்தவர், இப்போது, 'பக்கத்து வீட்டுப் பையன் விஜய்' என்று பாசமழை பொழிகிறார்.

இப்படி நம்பிக்கைக்கு தகுதி அற்றவர்களின் துணையோடு பா.ஜ., ஒன்று இரண்டு சீட் வெற்றி பெறுவதை விட, தனித்து களம் கண்டால், கட்சியாவது வளரும்!

***

திட்டத்தின் பலன் மக்களை சென்றடைய வேண்டும்! முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாய் தமிழகத்தை ஆண்டு வந்த திராவிட கட்சிகள், மக்களை சுய சிந்தனை அற்றவர்களாக, இலவசங்களுக்கு கையேந்தி நிற்கும் பிச்சைக்காரர்களாய் மாற்றி விட்டன.

'தாயுமானவர் திட்டம், உச்சிப்பிள்ளையார் திட்டம்' என்று வாய்க்கு வந்ததை எல்லாம் திட்டம் என்று அறிவித்து, தங்கள் பணப்பெட்டிகளை நிரப்புவதும், மதச்சார்பின்மை என்ற பெயரில் ஹிந்து விரோத செயல்களில் ஈடுபடுவதும், தமிழை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதும், தமிழகத்தை கன்னடரான ஈ.வெ.ராமசாமியின் மண் என்று நாடகம் போடுவதையும் கூட பொறுத்துக் கொண்ட மக்களால், நாள்தோறும் நடக்கும் கொலை - கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டு பொறுக்க முடியவில்லை.

கூடவே, தங்கள் குடும்ப உறுப்பினர்களும், கட்சியின் மேல்மட்ட தலைவர்களின் குடும்பங்கள் வளம் பெறுவதற்குமே கட்சிகள் நடத்தப்படுவதை மக்கள் ஏற்கவில்லை.

பலகார பொட்டலம் கொடுத்து, குழந்தையின் கழுத்துச் சங்கிலியை கழற்றிச் செல்லும் திருடர்கள் போல், இவர்கள், 1,000 ரூபாயை கொடுத்து, நாட்டையே சுரண்டுவதை அறிந்து கொண்டனர்.

இன்னும் எத்தனை காலம்தான் நம்மை ஏமாற்றுவார் என்ற கொதிநிலை மாறி, 'இன்னும் எத்தனை காலம்தான் ஏமாறுவோம்' என்று சிந்திக்கத் துவங்கினர்; மாற்றம் வராதா என்று ஏங்கினர்; அதற்கெல்லாம் இன்று நல்ல மாற்றம் வந்துவிட்டது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் துடிப்பானவர்; நடிகர் ரஜினியைப் போல் அரசியலுக்கு வருகிறேன் என்று, 'பிலிம்' காட்டி பின்வாங்காமல், துணிவுடன் களத்தில் இறங்கி சாதித்துள்ளார்.

இவராவது தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை தரவேண்டும்; அரசு கொண்டு வரும் திட்டத்தின் பலன்கள் இடைத்தரகர்களின் பைகளை நிரப்பாமல் மக்களை சென்றடையும் விதமாக ஆட்சி நடத்த வேண்டும்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us