/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
அரசு பஸ்களில் வழித்தட ஸ்டிக்கர் ஒட்டியாச்சு! 'தினமலர்' செய்தி எதிரொலி

PUBLISHED ON : செப் 27, 2025 12:00 AM

வால்பாறை:
'தினமலர்' செய்தி எதிரொலியாக, வால்பாறையில் இயங்கும் அரசு பஸ்களில் வழித்தட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், பொள்ளாச்சி, கோவை, பழநி, மண்ணார்க்காடு, திருப்பூர், சேலம் மற்றும் உள்ளூர்களுக்கு, 38 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர நான்கு 'ஸ்பேர்' பஸ்களும் பல்வேறு ரூட்களில் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், வால்பாறையில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்கள் ஊட்டி, மேட்டுப்பாளையம், கோவை போன்ற ஊர்களில் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டவையாகும். பிற கோட்டங்களில் இயக்கப்பட்ட அரசு பஸ் பெயர் மாற்றம் செய்யப்படாமலேயே வழித்தடங்களில் இயக் கப்படுகின்றன. இதனால் உள்ளூர் பயணியரும், சுற்றுலா பயணியரும் குழப்பத்திற்குள்ளாகின்றனர். இது குறித்த 'தினமலர்' நாளிதழில் கடந்த வாரம் செய்தி வெளியிடப் பட்டது.
இதனையடுத்து, அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் உத்தர வின் பேரில், வால்பாறையில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களில் பெயருடன் கூடிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. 'தினமலர்' செய்தி எதிரொலியா ல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால், பயணியர் நிம் மதியடைந்தனர்.