/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
சத்துணவு ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா: 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலி

PUBLISHED ON : செப் 27, 2025 12:00 AM
வால்பாறை:
'தினமலர்' செய்தி எதிரொலியாக, வால்பாறையில் சத்துணவு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது.
வால்பாறை நகராட்சியில் மொத்தம், 89 சத்துணவு மையங்கள் உள்ளன.
இதில், சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் உட்பட, 170 பேர் பணி புரிகின்றனர். இவர்களுக்கு மாதம் தோறும் ஒன்றாம் தேதி, அவர்களின் வங்கி கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும்.
இந்நிலையில், இந்த மாதத்திற்கான சம்பளம் கடந்த 14 ம்தேதி வரை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என 'தினமலர்' நாளிதழில் கடந்த, 16ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படவில்லை.
வால்பாறை நகராட்சி கமிஷனர்(பொ) குமரன் உத்தரவின் பேரில், நேற்று முன்தினம் அனைத்து சத்துணவு பணியாளர்களுக்கும், நகராட்சி சார்பில் வங்கி கணக்கு வாயிலாக சம்பளம் வழங்கப்பட்டது.
'தினமலர்' செய்தி எதிரொலியாக சம்பளம் வழங்கப்பட்டதால், சத்துணவு பணியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.