/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
அக்., 22 முதல் 28 வரை சிங்கப்பூர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா
/
அக்., 22 முதல் 28 வரை சிங்கப்பூர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா
அக்., 22 முதல் 28 வரை சிங்கப்பூர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா
அக்., 22 முதல் 28 வரை சிங்கப்பூர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா
அக் 18, 2025

சிங்கப்பூர் ஈசூன் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா அக்டோபர் 22 முதல் 28 வரை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. 22 ஆம் தேதி காலை 6 மணிக்கு நித்ய பூஜை, 6.30 மணிக்கு யாகசாலை பூஜை, 7 மணிக்கு வரிசை எடுத்தல், 7.30 மணிக்கு உபய பூஜை, 8 மணிக்கு யாகசாலை பூர்ணாஹீதி, 8.30 மணிக்கு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் புறப்பாடு, பிரசாதம் வழங்குதல் நடைபெறவிருக்கிறது.
26 ஆம் தேதி ஸ்ரீ விசாலாட்சி அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்வு நடைபெறும் .27 ஆம் தேதி முத்திரைத் திருவிழாவான சூரசம்ஹாரம். 10 மணிக்கு முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், 10.30 மணிக்கு சண்முக அர்ச்சனை, 11 மணிக்கு கலசாபிஷேகம் 11.30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறும். 27 ஆம் தேதி 8.30 மணிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறவுள்ளது.
28 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம். இரவு 7 மணிக்கு வரிசை எடுத்தல், 8 மணிக்கு திருமாங்கல்யதாரணம் கோலாகலமாக நடைபெறும். 8.30 மணிக்கு ஸ்ரீ முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் ஆலயம் வலம் வந்து அருள்பாலிப்பார். பக்தப் பெருமக்கள் பெருந் திரளாகக் கலந்து கொண்டு முருகப் பெருமான் திருவருள் பெற்றுய்யுமாறு ஆலய நிர்வாகம் அன்புடன் அழைக்கிறது.
- சிங்கப்பூரிலிருந்து நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement