/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கேரள காங்., சபாநாயகருக்கு ஜெத்தாவில் புகழஞ்சலி
/
கேரள காங்., சபாநாயகருக்கு ஜெத்தாவில் புகழஞ்சலி
செப் 20, 2025

ஜெத்தா; OICC ஜெத்தா மேற்கு பிராந்திய குழுவின் சார்பில் மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவர்,பி.பி. தங்கச்சனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மூத்த காங்கிரஸ் தலைவர், கேரள சட்டசபையின் முன்னாள் சபாநாயகர் பி. பி. தங்கச்சன் (87) மரணமடைந்தையொட்டி OICC ஜெத்தா மேற்கு பிராந்திய குழுவின் சார்பில் நினைவு அஞ்சலி ஏற்பாடு செய்யப்பட்டது.
OICC ஜெத்தா மேற்கு பிராந்தியக் குழுவின் தலைமையில் ஷரஃபியா அபீர் பாலிகிளினிக் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிராந்தியக் குழு தலைவர் ஹக்கீம் பாரக்கல் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சஹீர் மாஞ்சாலி முக்கிய உரையாற்றினார். தங்கச்சன் , தேவரா S.H. கல்லூரியில் B.A., B.L. பட்டங்களும், பொது நிர்வாகத்தில் டிப்ளோமாவும் பெற்று, பெரும்பாவூரில் வழக்குரைஞராகப் பணியாற்றியபோது பொதுப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
12 ஆண்டுகளுக்கு மேலாக நகராட்சி கவுன்சிலராக பணியாற்றி, 1982 முதல் 1996 வரை தொடர்ச்சியாக நான்கு முறை பெரும்பாவூர் தொகுதியை சட்டமன்றத்தில் பிரதிநிதியாகவும், 1987-1991 காலத்தில் பாராளுமன்றம் கட்சி செயலாளராகவும், 1991-95 காலகட்டத்தில் கருணாகரன் அமைச்சரவையில் கேரள சட்டமன்ற சபாநாயகராகவும் இருந்தார். 1995-96 காலத்தில் ஆண்டனி அமைச்சரவையில் அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
2004-இல் உம்மன் சாண்டி முதலமைச்சர் ஆன போது UDF ஒருங்கிணைப்பாளராகவும் பதவி ஏற்று 2018 வரை நீடித்தார். பல தசாப்தங்களாக காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து, மாநில அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர். எளிமையான அணுகுமுறை, கட்சியின் வளர்ச்சிக்காக செய்த உழைப்பு ஆகியவை அவர் பொதுமக்கள் மனங்களில் நிலைத்த இடம் பெறச் செய்தது என்று அவரை நிகழ்ச்சியில் பேசியவர்கள் நினைவுகூர்ந்தனர்.
எர்ணாகுளம் மாவட்டத் தலைவர் ஹர்ஷாத் எலூர், அமைப்பின் பொதுச் செயலாளர் அஸ்ஹப் வர்கலா, நோர்க்கா ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர் ஆலுவா ஆகியோர், பிராந்தியக் குழு, மாவட்டக் குழு, மண்டல குழுவின் பொறுப்பாளர்கள் என அதிகமான நண்பர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு செயலாளர் முஸ்தபா செலாரி நன்றியை தெரிவித்தார்.
--- சவுதியில் இருந்து நமது தினமலர் ஜெத்தா நிருபர் M Siraj
Advertisement