/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அஜ்மானில் போக்குவரத்து விழிப்புணர்வு
/
அஜ்மானில் போக்குவரத்து விழிப்புணர்வு

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அஜ்மான்: ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மான் பகுதியில் போலீசார் இந்திய பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல்வேறு பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் மத்தியில் போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து விளக்கி கூறினர். அப்போது சாலையை பாதுகாப்பான முறையில் கடப்பது உள்ளிட்டவை குறித்து தெரிவித்தனர்.
வாகனம் ஓட்டும் போது மொபைல் போனை தவிர்க்க வேண்டியது குறித்தும் விவரித்தனர். தங்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் இதுபோன்று செய்தால் அவர்களுக்கு அது குறித்து தெரிவிக்க வேண்டும் என்றனர். போக்குவரத்து விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிப்பதன் மூலம் விபத்தில்லாத சூழலை ஏற்படுத்த முடியும் என்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement