/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் நடந்த ஆசிரியர் தின விழா
/
துபாயில் நடந்த ஆசிரியர் தின விழா

துபாய் : துபாய் இந்தியன் கன்சுலேட்டில் ஆசிரியர் தின விழா நடந்தது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தனராக இந்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது :
அமீரகத்தில் இந்திய கல்வி திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தி வரும் கல்வி நிறுவனங்களின் முதல்வர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
மேலும் தேசிய கல்வி திட்டம் 2020 ஐ சிறப்பான வகையில் முன்னெடுத்து வருவதற்கு நன்றி தெரிவித்தார். அமீரகத்தில் 12 இந்திய பள்ளிக்கூடங்களில் 12 அடல் நவீன ஆய்வகத்தை ஏற்படுத்த இருப்பதாக கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அமீரகத்துக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர், கன்சல் ஜெனரல் சதீஷ் குமார் சிவன், 109 இந்திய பள்ளிக்கூடங்களின் முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
--- நமது செய்தியாளர்,
காஹிலா .
Advertisement