/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
இலங்கை நிந்தவூரில் மாபெரும் கல்விக் கண்காட்சி-2025
/
இலங்கை நிந்தவூரில் மாபெரும் கல்விக் கண்காட்சி-2025
இலங்கை நிந்தவூரில் மாபெரும் கல்விக் கண்காட்சி-2025
இலங்கை நிந்தவூரில் மாபெரும் கல்விக் கண்காட்சி-2025
அக் 20, 2025

இலங்கை கல்முனை வலயக்கல்வி அலுவலகம் மற்றும் நிந்தவூர் அல் -மஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலையும் இணைந்து நடாத்தும் கல்முனை கல்வி வலயத்திற்கான கண்காட்சி நிகழ்வு நிந்தவூர் அல் -மஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலையில் ஏ.சி. ஹாமிது தலைமையில் ஆரம்பமானது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் மற்றும் விசேட விருந்தினர்களாக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் ஏ. அஸ்பர் (ஜே.பி), பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான யூ.எல்.எம். சாஜீத், எம். றியாசா, எம்.எல்.எம். முதர்ரிஸ், திருமதி வீ.சந்தருபன், கே. லிங்கேஸ்வரன், நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரி எம்.எச்.எம்.ஜாபீர், வலயத்தின் கணக்காளர், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.பி.ஏ.வாஜித், நிந்தவூர் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் ஓய்வுபெற்ற SSP. ஏ.எம். ஜௌபர் , தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்களான சம்சுன் அலி மற்றும் இப்திகார் அஹமட், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
- இலங்கையிலிருந்து எம்.எஸ்.எம்.ஸாகிர்
Advertisement