/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
எத்தியோப்பியா அதிகாரிக்கு சென்னையில் விருது
/
எத்தியோப்பியா அதிகாரிக்கு சென்னையில் விருது
செப் 23, 2025

எத்தியோப்பியா நாட்டின் முதன்மை அறிவியல் ஆலோசகர், கல்வி அமைச்சகத்தின் கூட்டு முனைவர் பட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர். டாக்டர். கிருஷ்ணராஜ் ராமசாமிக்கு சென்னையில் நடந்த விழாவில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
எத்தியோப்பியா மற்றும் எத்தியோப்பியா நாடுகளின் புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர், கல்வி அமைச்சகத்தின் கூட்டு முனைவர் பட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர். டாக்டர். கிருஷ்ணராஜ் ராமசாமி. இவர் இந்தியாவிற்கும் எத்தியோப்பியாவிற்கும் இடையிலான இருதரப்பு கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாச்சார பரிமாற்றத்திலும், உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் செல்வாக்கு செலுத்தியதிலும் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். இதனை பாராட்டும் விதமாக ஹைவுட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தால் 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சாதனையாளர் விருது கிருஷ்ணராஜ் ராமசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
சென்னை தியாகராயர் கலையரங்கில் நடந்த விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
--- நமது தினமலர் வாசகர்.
Advertisement