sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/விருந்தினர் பகுதி/அட்டைப் பெட்டிகள் கூட சிட்டுக்குருவிகளுக்கு வீடு தான் !

அட்டைப் பெட்டிகள் கூட சிட்டுக்குருவிகளுக்கு வீடு தான் !

அட்டைப் பெட்டிகள் கூட சிட்டுக்குருவிகளுக்கு வீடு தான் !


UPDATED : மே 31, 2026 08:59 AM

ADDED : மே 30, 2026 05:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2026 08:59 AM ADDED : மே 30, 2026 05:53 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கொஞ்சம் இயற்கையைத் திரும்பிப் பாருங்க குட்டீஸ்!' என சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 110 சிறுவர், சிறுமியரை அழைத்து வாழ்கைக்கல்வி தொடர்பான கோடை கால முகாமை நடத்தியிருக்கிறது பல்லடம் 'வனம் பவுண்டேஷன்'.

இதில், 'சுற்றுச்சூழலில் பறவைகளின் பங்கு' என்ற தலைப்பில், திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் சில விஷயங்களை மாணவர்களிடம் பகிர்ந்தார். மனிதன் உயிர்வாழத் தேவையான காற்று, நீர், உணவு என எல்லாவற்றின் பின்னாலும் பறவைகளின் 'சத்தமில்லாத' உழைப்பு ஒளிந்திருக்கிறது.

பழங்களைச் சாப்பிடும் பறவைகள், எச்சமிடுவதன் மூலம் விதைகளை பல இடங்களுக்குப் பரப்புகின்றன. இதனால் காடுகள் வளர்கின்றன. நமக்கு ஆக்சிஜனும், மழையும் கிடைக்கிறது. பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகள் மற்றும் எலிகளை, பறவைகள் வேட்டையாடி உண்பதால், அது விவசாயிகளுக்கு உதவியாக இருக்கிறது. தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கும் உதவுகின்றன.

வீதிகளில், இறந்து கிடக்கும் சிறு உயிரினங்களை காகங்களும், பருந்துகளும் சாப்பிட்டு சுத்தம் செய்கின்றன. காடுகளில் இறக்கும் விலங்குகளை 'பாறு கழுகுகள்' உண்பதால், கொடிய நோய்த்தொற்றுகள் பரவாமல் தடுக்கப்படுகிறது. மரத்தை அரித்துச் சிதைக்கும் கரையான்களை மரங்கொத்திகள் கொத்தித் தின்பதால், அவை மரங்களுக்கு சிறந்த மருத்துவராகச் செயல்படுகின்றன.

மொபைல் போன் டவர் கதிர்வீச்சால் சிட்டுக்குருவிகள் அழிகிறது என்பது உண்மையல்ல. அவை, கூடு கட்டுவதற்கு ஏற்ற கூரை வீடுகளும், ஓட்டு வீடுகளும் மறைந்து, கான்கிரீட் காடுகள் பெருகிவிட்டதுதான் முதல் காரணம். நம்முடைய நவீன வாழ்க்கை முறையால் சமையலறைக் கழிவுகளோ, தானியச் சிதறல்களோ அவற்றுக்கு உணவாகக் கிடைப்பதே இல்லை.

இன்றயை இளைய தலைமுறை பெரிய அளவில் காடுகளை உருவாக்கத் தேவையில்லை, சிறுவர்கள் நினைத்தால் தங்களது வீடுகளிலேயே சிறிய அட்டைப் பெட்டிகளை தொங்கவிடலாம். இதனால், சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதற்கான இடவசதியை நாம் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

மொபைல் போன் டவர் கதிர்வீச்சால் சிட்டுக்குருவிகள் அழிகிறது என்பது உண்மையல்ல. அவை, கூடு கட்டுவதற்கு ஏற்ற கூரை வீடுகளும், ஓட்டு வீடுகளும் மறைந்து, கான்கிரீட் காடுகள் பெருகிவிட்டதுதான் முதல் காரணம்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us